இரு வேறு கட்டணம் அரசு பஸ்சில் குளறுபடி
பல்லடம் : அரசு பஸ்ஸில் இருவேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறித்து, பல்லடம் அருகே, கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பல்லடத்தை அடுத்த, கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், கோவை சிங்காநல்லூர் சென்றுவிட்டு, அங்கிருந்து, மீண்டும் கள்ளிப் பாளையம் திரும்பியுள்ளார். இதற்கு, அரசு பஸ்களில், இரு வேறு டிக்கெட் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:சிங்காநல்லுார் - - பல்லடம் கள்ளிப்பாளையத்துக்கு, 42 கி.மீ., துாரம். கள்ளிப்பாளையத்தில் இருந்து சிங்காநல்லுார் சென்றதற்கு, அரசு பஸ்சில், 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், அங்கிருந்து கள்ளிப்பாளையத்துக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.சாதாரண பஸ், விரைவு பஸ் என்று இருந்தாலும், இவ்வளவு கட்டண வேறுபாடு ஏன் என்று தெரியவில்லை. ஊருக்குதகுந்தார்போல் பஸ்களில் இரு வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.