உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யுகாதி; கோவில்களில் சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

யுகாதி; கோவில்களில் சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை; யுகாதி பண்டிகையையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ரேணுகா தேவி அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக யுகாதி பண்டிகை அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில்,உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் யுகாதி பண்டிகையையொட்டி, நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.பள்ளபாளையம் செங்குளம் அருகே அமைந்துள்ள உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த 15ம் தேதி முதல் யுகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.நாள்தோறும் நடந்த புற்று பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். நேற்று புற்று பூஜையும், ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வேங்கடவன் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. ஜமத்கினி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.மேலும், தங்ககவசம் போர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வேங்கடேச பெருமாளையும், தரிசனம் செய்து, பக்தர்கள் பிரசாதம் பெற்றுச்சென்றனர்.உடுமலை ருத்ரப்ப நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில், யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.ரேணுகாதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியிலிலேயே கொண்டாடப்படுகிறது.அந்த நாளில் வரும் ஒரு நாளிகை அமாவாசை திதி இருந்தாலும், அதற்கு அடுத்த நாளினையே கணக்கில் எடுத்துக் கொண்டு யுகாதி கொண்டாடப்படுகிறது.அவ்வகையில், நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை