தொடுதல் புரிந்து கொள்ளுங்க...
பல்லடம் : பள்ளி மாணவியருக்கு, 'குட் டச் மற்றும் பேட் டச்' குறித்து, போலீசார் அறிவுறுத்தினர்.நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு, கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். செப்., 24ம் தேதி ஆண்டுதோறும் நாட்டு நலப்பணித் திட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி, பல்லடம் அருகே கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை அம்சவேணி தலைமை வகித்தார்.முன்னதாக, நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பழக்கத்தின் அபாயம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், 'தொடுதல்' குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.