யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
திருப்பூர்; பல்லடம், சேடபாளையம், யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் படித்த கணிணி அறிவியல் பிரிவு மாணவி சந்தியா, 591 மதிப்பெண் பெற்று முதலிடம். வணிக கணிதவியல் பிரிவு மாணவி சஷ்மிதா, 589 இரண்டாமிடம். கணிணி அறிவியல் பிரிவு மாணவி கவிநயா, 585 மதிப்பெண், 3வது இடம். கணிணி பயன்பாட்டில், 13 பேர், கணிணி அறிவியலில், 12 பேர், பிரெஞ்சு பாடத்தில், ஐந்து பேர், கணக்குபதிவியலில், நான்கு பேர், பொருளியியல், வணிகவியல் மற்றும் வேதியியலில் தலா, இருவர். கணிதம், வணிக கணிதத்தில் தலா ஒருவர் என மொத்தம், 42 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளியில் மொத்தம், 21 மாணவ, மாணவியர் நுாற்றுக்கு, 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய, 140 மாணவர்களில், ஏழு பேர், 580க்கும் மேல் பெற்றுள்ளனர். 25 பேர், 550க்கும் மேல், 40 பேர், 500க்கு மேல், 32 பேர், 450க்கு மேல், 14 பேர், 350க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாணவி சஹானா, 500க்கு 495 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் நவீன்குமார், 492 மதிப்பெண்ணுடன், 2 வது இடம், மாணவர் தினேஷ், 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அறிவியலில், பத்து பேர், சமூக அறிவியலில், ஐந்து மாணவர் நுாற்றுக்குநுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் சாவித்திரி ராஜகோபால், செயலாளர் செல்வி வினோதரணி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். பள்ளியில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை அட்மிஷன் நடைபெறுகிறது. விபரங்களுக்கு, 97509 53913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.