வள்ளலார் பிறந்த நாள் விழா
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலார் அரங்கில், அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை நாள் விழா, ராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாள் விழா, மாணவியர் கலைத்திறனை வெளிப்படுத்தும் விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைவர் நீறணி பவளக்குன்றன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவானந்தம் பேசினார். அகவல் பாராயணம், கருத்தரங்கம், ஒளி வழிபாடு நடந்தது. கோவை பாரதிய வித்யா பவன் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் பாலஅபிராமி தேவாரம், திருவாசகம், திரு அருட்பா பாடல்களைப் பாடினார். திருப்பூர் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கார்மிகா, பரத நாட்டியம் ஆடினார். மங்கை பாரதி பதிப்பகம் கந்தசுவாமி, பரிசு வழங்கி பாராட்டினார்.