உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே கேட் பகுதியில் திணறும் வாகனங்கள்

ரயில்வே கேட் பகுதியில் திணறும் வாகனங்கள்

உடுமலை; உடுமலை ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுவதால், விபத்துக்கள் ஏற்படுகிறது. உடுமலையிலிருந்து தெற்கு பகுதியிலுள்ள பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம், ஐ.டி.ஐ., அரசு கல்லுாரி, போக்குவரத்து அலுவலகம் என அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக ராமசாமி நகர் ரோடு உள்ளது. இங்குள்ள ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே துறையால் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போது, தார் ரோடு அகற்றப்பட்டது. பணி முடிந்து ஒரு மாதமாகியும், இணைப்பு பகுதியில் தார் ரோடு அமைக்காமல், மிகப்பெரிய குழி மற்றும் ஜல்லிக்கற்களாக காணப்படுகிறது. இதனால், தண்டவாளத்தை கடக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் ரோடு அமைக்க வேண்டும். மேலும், இந்த ரோட்டில், பல இடங்களில் தார் ரோடு சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனையும் புதுப்பிக்க நகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ