உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விருது

வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விருது

திருப்பூர்: தொலைந்த மற்றும் திருடப்பட்ட மொபைல் போன்களை முடக்குவது, கண்டறிந்து மீட்பதற்காக, மத்திய அரசு, கடந்த 2023 ம் ஆண்டு முதல் சி.இ.ஐ.ஆர். திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தொலைந்த மொபைல் போன்களை, இந்த தளம் வாயிலாக கண்டறிந்து மீட்டதில், சிறப்பாக செயல்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, தமிழக தொலை தொடர்புத்துறை மற்றும் சைபர் குற்றப்பிரிவு சார்பில் விருது வழங்கப்பட்டது. அவ்வகையில், கடந்த 2024, செப். 1 முதல் நடப்பாண்டு ஆக. 31 வரையிலான காலத்தில், சி.இ.ஐ.ஆர்., தரவரிசை அமைப்பு அடிப்படையில், திருப்பூர், 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், தமிழகத்தில் முதலிடம்; மாவட்டம் வாரியான இடத்தில் திருப்பூர் மாநகர போலீஸ், மாநில அளவில் இரண்டாமிடத்துக்கான பரிசு பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி