எழுச்சி பொங்கிய விநாயகர் சிலை அணிவகுப்பு
திருப்பூரில் நடந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலப் பொதுக்கூட்டத்தில், ஹிந் து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை குலைப்பதற்கு போலீசார் கடும் முயற்சி செய்தனர். சிலை எண்ணிக்கை குறைந்தால் போலீசுக்கு பாராட்டும், அதிகரித்தால் தண்டனையும் என்று போலீஸ் அதிகாரி ஓபன் மைக்கில் பேசுகிறார். போலீஸ் அதிகாரிகளே சிலையை எடுத்து அதை அழிக்கும் நிகழ்வும் நடந்துள்ளது. அடுத்தாண்டு தேர்தலில் தமிழகத்தை ஆளும் ஹிந்து விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.இந்த நாடு ஹிந்துக்கள் நாடு. நமக்கு சொந்தமான நாடு. நம்மை பாதுகாக்கும் அரசு தான் நமக்கு வேண்டும். இந்த ஆட்சி வேண்டாம் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஹிந்துக்களுக்கு விரோதமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். யாரை தோற்கடிக்க வேண்டும்; யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நமக்கு தெரியும். நடப்பாண்டு மிகுந்த எழுச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. சிறுவர்கள், பெண்கள் அதிகளவில் பங்கேற்பது ஒரு எழுச்சியை காட்டுகிறது. கம்யூ., ஆளும் கேரளத்தில் அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். அதற்கு இங்குள்ள முதல்வரை அழைக்கின்றனர். இந்த மாற்றம் ஏன் வந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.