ஸ்ரீ குரு சர்வா சி.ஏ. அகாடமியில் விஜயதசமி சேர்க்கை துவக்கம்
திருப்பூர் : திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், ஸ்ரீ குரு சர்வா சி.ஏ. அகாடமியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பிற்கு விஜயதசமி சேர்க்கை துவங்கி உள்ளது. சி.ஏ. படிப்பிற்கென்றே முழு நேர பயிற்சி வகுப்புகளுடன் ஸ்ரீகுருசர்வா அகாடமி, சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருவதோடு சி.ஏ. இன்டர்தேர்வில் தேசிய அளவில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஜன. 25ல் நடைபெற்ற சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில் மகாலட்சுமி, 400க்கு, 335 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்ததோடு, 8 மாணவர்கள் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இன்டர்தேர்வில் 12 மாணவர்கள் ஒரே முயற்சியில் இரண்டு குரூப்களிலும் தேர்ச்சி பெற்றனர். இப்போது, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி இறுதி ஆண்டு படிப்போரும் பதிவு செய்யலாம். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்தபின் சி.ஏ பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகும். சேர்க்கை, ஆலோசனை பெற 96009 22888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.