உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விகாஸ் வித்யாலயா கல்வி குழும தலைவர் பெருமிதம்

விகாஸ் வித்யாலயா கல்வி குழும தலைவர் பெருமிதம்

''தலைமுறைகள் விரும்பும் பள்ளியாக, எங்கள் பள்ளி விளங்கி வருகிறது,'' என்கிறார் திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா குழுமங்களின் தலைவர் ஆண்டவர் ராமசாமி.எங்கள் பள்ளியில் படித்து முடித்து, திருமணமாகி குழந்தை பெற்ற நிலையில், அந்த குழந்தையையும் அவர்கள் படித்த பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என விரும்பி, எங்கள் பள்ளியில் சேர்க்கும் முன்னாள் மாணவ, மாணவியர் பலர் உள்ளனர். இது, எங்களுக்கு பெருமை தரும் விஷயம்.எங்களிடம் படித்த வட மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பலர், பெரிய தொழிலதிபர்களாக, ஏற்றுமதியாளர்களாக மாறிவிட்டனர். உள்ளூர் மாணவர்கள் உயர்கல்வி பயின்று டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர் உள்ளிட்ட பெரிய வேலைகளில் உள்ளனர்; வெளிநாடுகளிலும் 'செட்டில்' ஆகியுள்ளனர்.எங்கள் பள்ளியில் பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவ, மாணவியர் பலர் எம்.ஐ.டி., ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வியில் இணைந்து பயில்கின்றனர்.பிரபல கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், 'கேபிடேஷன்' கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமிருக்காது; அந்தளவு மதிப்பெண் பெற வைக்கிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதே எங்களின் தாரக மந்திரம். ஆன்மிகத்தில் எங்கள் பிள்ளைகளை வழி நடத்துவதால், அவர்கள் மனம் நல் சிந்தனை பெறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் பெற்றோருக்கு, பாத பூஜை செய்ய வைக்கிறோம்; இது, அவர்களுக்கு பெரிய ஆசிர்வாதத்தை தருகிறது.வித்யாசாகர் மற்றும் விகாஸ் வித்யாலயா என, இரு பள்ளிகளிலும் மாணவ, மாணவியரின் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம். ஒழுக்கத்துடன் பயிலும் பிள்ளைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கிறது.எங்கள் மாணவர்களின் அடையாளமே தனித்திறமை, தனித்துவம் தான். விளையாட்டிலும் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். பள்ளி ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிகின்றனர்.ஆசிரியர்களும், பெற்றோரும் இணைந்து தான் மாணவர்களை செம்மைப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம்.எங்களின் மற்றொரு கல்வி நிறுவனமான வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் சிவப்பிரியா, பொருளாளர் ராதா, விகாஸ்வித்யாலயா மெட்ரிக் பள்ளி செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோரின் சீரிய முயற்சியால் எங்கள் கல்விக்குழுமம் சிறப்புற செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை