உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்

விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்

திருப்பூர்,; திருப்பூர் விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களில் 46 சதவீதம் பேர் 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.மேலும் 79 சதவீதம் பேர் 400க்கு மேல் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் இருவர்; அறிவியலில் ஒருவர்; சமூக அறிவியலில் 5 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளி முதலிடம் பெற்ற மாணவி ஜனஸ்ரீ 495 மதிப்பெண் பெற்றுள்ளார். ஜமுனா தேவி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் 494 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம் பெற்றனர். யாழினி மற்றும் ஆர்னாப்ரதா ஆகியோர் 487 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பெற்றனர்.பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி செயலாளர் மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் ரேணுகாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.பள்ளியில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கு சேர்க்கை நடக்கிறது, என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ