உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை கொட்டும் பிரச்னை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 குப்பை கொட்டும் பிரச்னை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: முதலிபாளையம் பாறைக்குழியில், 1.20 லட்சம் டிடிஎஸ்., மாசுபட்ட நீரை பாட்டிலில் அடைத்து வைத்து, அதற்கு மலர் வளையம் வைத்து, தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பெண்கள் உட்பட ஊர்மக்கள் பலரும், கிராமத்தில் துாய்மை காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தியபடி பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதியை, மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதி களில் உள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண் டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகளை தவிர, கழிவு மேலாண்மை தொடர்பான புதிய முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில், பா.ஜ., நாம் தமிழர், த.வெ.க., கம்யூ., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்