மேலும் செய்திகள்
மின்வேலி அமைத்துள்ள விவசாயிகளுக்கு அறிவிப்பு
20-Sep-2025
உடுமலை: உடுமலை அருகே, வன எல்லை கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, ஆடு, நாய்களை கடித்து, துாக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட, கொழுமம் குப்பம்பாளையம், சங்கராமநல்லுார் தெற்கு கிராமத்தைச்சேர்ந்தவர் விவசாயி சாமிக்கண்ணு. வன எல்லையில் அமைந்துள்ள அவரது ஓதுவரை தோட்டத்தில் கட்டி வைத்திருந்த, ஒன்றரை வயதுடைய செம்மறி ஆட்டை, நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை கடித்து, துாக்கிச்சென்றது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்து, சுற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிறுத்தையில் கால் தடம் பல இடங்களில் பதிவாகியிருந்தால், சிறுத்தையில் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. வன எல்லையில் அமைந்துள்ளதால், அமராவதி வனச்சரகர் புகழேந்தி தலைமையில், வனத்துறையினர் இரு குழுக்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு, பட்டாசு வெடித்தும், மீண்டும் கிராமத்திற்குள் சிறுத்தை வராமல் இருக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக, கொழுமம், ஆண்டிபட்டி, ஆத்துார் உள்ளிட்ட வன எல்லை கிராமங்களில், ஒரு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், ஆடு, நாய் ஆகியவற்றை அடித்துக்கொன்று, துாக்கிச்சென்றதாகவும், விவசாய நிலங்கள், கல் குவாரி பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுவரை இல்லாத நிகழ்வாக, வன எல்லை கிராமங்களுக்குள் சிறுத்தை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
20-Sep-2025