மேலும் செய்திகள்
பிரதிஷ்டை விவகாரம்; இருதரப்பினர் மோதல்
21-Jul-2025
திருப்பூர்; விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடம் தொடர்பாக ஹிந்து முன்னணி முன்னாள் நிர்வாகி மற்றும் தற்போதுள்ள ஹிந்து முன்னணியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில், இருவர் காயமடைந்தனர். புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து, போலீசார் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Jul-2025