உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டுக்குள் விதிமீறல்

பஸ் ஸ்டாண்டுக்குள் விதிமீறல்

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில், போதிய இடவசதி இல்லாததால், பஸ்கள் திரும்பவும், பயணியர் நிற்பதற்கும் திணற வேண்டியுள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டுக்குள், இருசக்கர வாகன ஓட்டுநர்கள், தாறுமாறாக வாகனங்களை ஓ ட்டிச்செல்கின்றனர். பயணியர் நிற்கும் இடத்திலும், நடந்து செல்லும் பாதையிலும், வேகமாக செல்வதுடன், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால், பயணியர் பாதிக்கின்றனர். விதிகளை மீறி, பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை