துர்காதேவி சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ ஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி சார்பில், திருப்பூர் வாலிபாளையம் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நவராத்திரி துர்கா பூஜை கொண்டாடப்பட்டது.கடந்த, 2 முதல், 12ம் தேதி வரை தினந்தோறும் காலை, 8:00 மற்றும் மாலை, 7:00 மணிக்கு பூஜை, பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விஜயதசமியை முன்னிட்டு மஹா நவமி சித்திதாத்ரி பூஜை மற்றும் ஹோமம் மற்றும் இரவு முழுவதும் பஜனை நடந்தது.நவராத்திரி பூஜை நிறைவு பெற்றதையடுத்து, பத்து நாட்களாக வழிபட்டு வந்த மஹா துர்காம்பிகை உள்ளிட்ட சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டன. ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை சென்று, ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.