விவேகானந்தா சேவாலயம் சார்பில் தி.பூண்டியில் அன்னதானக்கூடம்
அவிநாசி; திருமுருகன்பூண்டி, ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில், 'ஸ்ரீ சாரதா தேவி அன்ன ஷேத்திரம்' என்ற அன்னதானக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.மாஸ்டர் யாஷிவ், பாலக்கால் நட்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். சேவா லய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.''அன்னதான கூடம் கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு நாள்தோறும் ஏழைகளுக்கு அன்னதானம்; மாலை நேரங்களில் மாணவர்களுக்கு இலவசமாக தனிப்பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்'' என்றனர் அறங்காவலர்கள்.