சுப்ரீம் மொபைல்ஸ்-ல் விவோ வி60 அறிமுகம்
திருப்பூர்; சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில், 'விவோ வி60' மொபைல் போன் அறிமுக விழா நடந்தது. இதில், நடிகை ஸ்வாசிகா பங்கேற்று புதிய மொபைல்போனை அறிமுகம் செய்தார். சுப்ரீம் மொபைல்ஸ், கோவை ேஹாப்ஸ் கல்லுாரி கிளையில், 'விவோ வி60' புதிய மாடல் மொபைல் போன் அறிமுக விழா, நடந்தது. 'லப்பர் பந்து' புகழ் நடிகை ஸ்வாசிகா பங்கேற்று, புதிய மாடல் மொபைல் போன் முதல் விற்பனையை துவக்கி வைத்து, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் வழங்கினார். 'யு டியூப்' பிரபலம் திருப்பூர் மோகன், சுப்ரீம் மொபைல்ஸ் கோவை விற்பனை மேலாளர் சிவராஜ், பிராந்திய விற்பனை மேலாளர் பிரேஜேஷ், பகுதி மேலாளர் சசிகுமார் பங்கேற்றனர். இந்த மாடலில், 6.7 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென், 4 சிப்செட் கொண்டுள்ளது. மேலும், 90வாட்ஸ் (w) சார்ஜிங் ஆதரவுடன், 6400 மில்லிஆம்பியர்/மணி (mah) பேட்டரி மற்றும் ஆன்ட்ராய்ட் 15 அடிப்படையில் இயங்குகிறது. மேலும், 50எம்.பி., + 50 எம்.பி., ரியர் கேமரா, 8 எம்.பி., டெலிபோட்டோ கேமரா மற்றும் 5 எம்.பி., முன்பக்க கேமரா உள்ளது. சுப்ரீம் மொபைல்ஸ் கிளைகளில் இந்த மாடல் போன் வாங்குவோருக்கு 10 சதவீதம் முதல் கேஷ்பேக் ஆபர் மற்றும், 4,999 ரூபாய் மதிப்புள்ள பார் ஸ்பீக்கர் இலவசம். கூடுதல் விவரம் அறிய, 98587-98587 என்ற எண்ணுக்கு 'Hi' என வாட்ஸ் ஆப் செய்தால், தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகத்தினர் கூறினர்.