உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டில் நுழைய முயற்சி டூவீலர் ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

பஸ் ஸ்டாண்டில் நுழைய முயற்சி டூவீலர் ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், டூவீலரில் வந்த முதியவர், பஸ் மோதியதில் பலியானார். இதை தொடர்ந்து இருசக்கர வாக-னங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதை பலரும் கண்டு கொள்வதில்லை. பஸ் ஸ்டாண்டுக்குள் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே டூவீலர்களை நிறுத்துவதால், பஸ்களை இயக்குவதற்கும், பயணிகளுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்-பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகளின் தகவலின்-படி, பஸ் ஸ்டாண்டின் நான்கு நுழைவு வாயிலிலும் நேற்று கண்-காணிப்பில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், இருசக்கர வாக-னங்களில் வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை