உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம்: விவசாயிகள் - பொதுமக்கள் அச்சம்

கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம்: விவசாயிகள் - பொதுமக்கள் அச்சம்

பல்லடம்:பல்லடம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டத்தால், விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.நகராட்சி பகுதியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நன்மை அளிக்குமா?கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டம் உண்மையில் நன்மை அளிக்குமா என்ற சந்தேகம் உள்ளது. கோவையில் இதேபோன்று திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்க விவசாயிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இதுபோல், பல்லடம் நகராட்சியில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர், உண்மையில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி உள்ளது. மேலும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என்றனர்.- விவசாயிகள்---------------------------------------------------------நிதி இழப்பு ஏற்படும்இங்குள்ள கழிவு நீரை வேறு இடத்துக்குக் கொண்டு சென்று சுத்திகரித்து பயன்படுத்துவதன் மூலம், நகராட்சி பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறையும். மேலும், இத்திட்டம் குறித்து சரியான புரிதல் இல்லை. இத்திட்டத்தை செயல்படுத்த சமீபத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட புதிய ரோடுகள் அனைத்தும் தோண்டப்பட்டு வருகின்றன. இது நிதி இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.- பொதுமக்கள்---------------------------------------------------------புரிதல் இல்லாமல் எதிர்ப்புராயர்பாளையம், முல்லை நகர், மங்கலம் ரோடு என, நான்கு இடங்களில் கழிவு நீர் சுத்திகரித்து, அங்கிருந்து, பச்சாபாளையம் ஓடைக்கும், தொடர்ந்து வடுகபாளையம் புதுாரில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்திலும் கொண்டு செல்லப்பட்டு, தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 14 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ள இத்திட்டத்தில் கழிவு நீர் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது.ஓடையில் செல்லும் மழை நீர் அல்ல. இது விவசாயிகளுக்கு பயன்படுவதுடன், நகராட்சியில் தேங்கும் கழிவு நீருக்கும் தீர்வு கிடைக்கும். பாதாள சாக்கடைக்கு மாற்றாக, இத்திட்டத்தை கட்டாயம் செயல்படுத்தியாக வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், போதிய புரிதல் இல்லாமல் சிலர் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.- நகராட்சி அதிகாரிகள்

விழிப்புணர்வு வேண்டும்

கழிவு நீரை சுத்திகரிக்கும் இத்திட்டம் குறித்து, நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட, விவசாயிகள், பொதுமக்கள் என, யாருக்குமே தெரியவில்லை. இத்திட்டத்தால், நிலத்தடி நீர் பாதிக்கும்,குடிநீருடன் கழிவு நீர் கலக்கும், துர்நாற்றம் ஏற்படும் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் உள்ளன. திட்டத்தை துவங்கும் முன், நகராட்சி நிர்வாகம், இது குறித்து தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். எனவே, திட்ட செயல்பாடுகள் என்ன, இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் உள்ளிட்டவை குறித்து, விவசாயிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின், இதை செயல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ