மேலும் செய்திகள்
எங்கே போனார் எங்க எம்.பி.,?
05-Jul-2025
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், நீர்வழிப் பாதைகள் மூடப்பட்டு வருவதன் காரணமாக, மழைநீர் சேகரிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பல்லடம் வட்டாரத்தில், விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் சராசரி மழை பெய்து வந்த போதும், அவை, முறையாக சேகர மாவதில்லை. எனவே, பி.ஏ.பி., பாசனத்தையும், ஆழ்துளை கிணறுகளையும் நம்பியே விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம், அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால், ஆழ்துளை கிணறுகளும் பயனற்று போய் வருகின்றன. மழை நீரால் நிரம்பாத குளம் குட்டைகளை, பி.ஏ.பி., பாசன நீர் மூலம் நிரப்பி, விவசாயிகள், நிலத்தடிநீரை செறிவூட்டி வருகின்றனர். இவ்வாறு, மழை நீரை கொண்டு செல்லக்கூடிய நீர்வழிப்பாதைகளை முறையாக பராமரிக்காததன் விளைவால், மழைநீர் சேகரிப்பு கேள்விக்குறியாகி விட்டது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், நீர்வழிப் பாதைகளை முறையாக துார்வாரி மழைநீர் சேகரிப்பை உறுதிப்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும். பல்லடம் வட்டார கிராமங்கள் முழுவதும் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
05-Jul-2025