குப்பைகளை கொட்ட விட மாட்டோம்; காளம்பாளையம் மக்கள் திட்டவட்டம்
திருப்பூர் : திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகள், பொங்குபாளையத்தில் உள்ள காளம்பாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பாறைக்குழியில் மாநகராட்சி குப்பை கெட்டுவதை கைவிடவில்லை. இதனால், குப்பை லாரியை சிறைபிடிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் அனைத்து கட்சியினர், போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.துணை மேயர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் மகேஸ்வரி, மா.கம்யூ., மாவட்டக்குழு உறுப்பினர் சிகாமணி மற்றும் அனைத்து கட்சியினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர், பொதுமக்கள் பங்கேற்றனர். சொன்னதைச்செய்தார்களா?
அனைத்துக்கட்சி நிர்வாகிகள் தரப்பில்பேசியதாவது:மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண் திட்டம் தோல்வியடைந்துள்ளது.காளம்பாளையம் பாறைக்குழியில் ஒரு படலம் குப்பை கொட்டினால், அதன் பின் அடுத்த படலம் மண் கொட்டப்படும், அதன் பின் தான் மீண்டும் குப்பை கொட்டப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக குப்பைகளுக்கு மருந்து கூட அடிக்காமல் அப்படியே குப்பையை கொட்டுகின்றனர். மாசடைந்த நிலத்தடி நீர்
நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக தண்ணீர் கிடைக்காத நிலையில், ஆழ்குழாய் கிணறு தண்ணீரை நம்பித்தான் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் உள்ளனர்.குப்பைக்கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இன்னும் மோசமான சூழலுக்குத் தள்ளுகிறது. போராட்டம் நடத்தும்போது அதிகாரிகள் வருகின்றனர். அப்போதைக்கு மட்டும் மருந்து அடிக்கின்றனர். பின், யாரும் எட்டி பார்ப்பதில்லை. கண்காணிக்காதஅதிகாரிகள்
மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் முறையாக செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை. அதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட்டிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நிலை வந்திருக்காது.எனவே, நான்கு நாட்களுக்கு பின் குப்பை கொட்டுவதை நிறுத்துவதற்கு பதிலாக, இப்போ திருந்தே நிறுத்தி விடுங்கள். மீறி குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறைபிடிப்போம்.பாறைக்குழிகளை மூட600 லோடு மண் தேவைகுப்பை கொட்டப்படும் பாறைக்குழிகளை முழுமையாக மூடி பூங்கா அமைத்து தருகிறோம். பாறைக்குழிகளில் முழுமையாக மூட குறைந்தபட்சம், 600 லோடு மண் தேவைப்படுகிறது. மாநகரில் பல்வேறு சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் மண்ணை வைத்து முழுமையாக மூடிக் கொடுக்கிறோம். இன்னும், நான்கு நாட்களுக்கு பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டி, அதன் மீது மண் கொட்டி சமன் செய்யப்படும். இன்னும், நான்கு நாட்கள் அவகாசம் வேண்டும்.மேலும், அப்பகுதியில் உள்ள அரசு பாறைக்குழிகளில் குப்பைக் கழிவுகளை கொட்ட அனுமதித்திருப்பது கலெக்டரின் உத்தரவு. கலெக்டருடன் கலந்து ஆலோசித்து விட்டு உரிய தீர்வு காணப்படும்.- தினேஷ்குமார், மேயர்.