தடை கடப்போம்... சாதிப்போம்!
சாய் கிருபா சிறப்பு பள்ளி நிறுவனர் கவின் திருமுருகன் பேசியதாவது:மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சமுதாயத்திற்குள் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும். நல்ல நிலையில் உள்ள நாம் மட்டும் சமுதாயத்தின் அங்கம் அல்ல; உடல், மனதில் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தின் அங்கம் தான்.நம்மை போன்றே, மாற்றுத்திறன் படைத்தவர்களாலும் பணி செய்ய முடியும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆட்டிசம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உரிய பயிற்சி வழங்கி அவர்களை சுயமாக சிந்தித்து, செயல்பட பயிற்சி வழங்குகிறோம். பெருமாநல்லுரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் செயல்படும் 'கபே' வை மாற்றுத்திறனாளிகளே நடத்துகின்றனர்.அதேபோல், கார்மென்ட்ஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த மாதிரி சூழ்நிலையை மட்டும் மாற்றியமைத்து கொடுத்தால் போதும்; அவர்களாலும் திறம்பட செயல்பட முடியும். மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து அனைவரும் பேசுகிறோம்; ஆனால், அதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வருவதில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.