மேலும் செய்திகள்
இலக்கை தாண்டிய 'வெற்றி' பயணம்
03-Feb-2025
திருப்பூர், : 'நபார்டு' வங்கி அதிகாரி, தனது மகள் திருமண விழாவை கொண்டாடும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க நிதி அளித்துள்ளார்.பெங்களூருவில் உள்ள 'நபார்டு' வங்கி பொதுமேலாளர் பிருந்தா; இவர், நீண்ட நாட்களாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட ஆர்வலராக இருந்து வருகிறார். அவரது மகள் ஸ்ரீநிதிக்கும், புருேஷாத்தம் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.திருமண விழாவை பசுமை விழாவாக கொண்டாடும் எண்ணத்துடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, 50 ஆயிரம் ரூபாய் நிதியை பிருந்தா வழங்கியுள்ளார்.பசுமை ஆர்வலர்கள், தங்கள் இல்ல விழா கொண்டாட்டத்தின் போது, மரக்கன்று நட்டு வளர்க்க பங்களிப்பை வழங்குவதும், பசுமை கொண்டாட்டமாக இருக்கும். பல்வகை நல உதவி வழங்குவது போல், பசுமை வளர்ப்புக்கு நிதி வழங்குவதை வரவேற்பதாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
03-Feb-2025