உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள்

உடுமலை; ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. சீருடை, காலனிகள், புத்தகம், வண்ண பென்சில்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.இதில் ஒன்றாக புத்தக பைகளும் வழங்கப்படுகிறது. ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், மாணவர்களுக்கு புதிய புத்தக பைகளை வழங்கினார்.உடுமலை சுற்றுவட்டார அரசு துவக்கப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு புதிய புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.*உடுமலை ஒன்றியம் கரட்டூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் 32 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.சமதள பள்ளிகளுக்கு மட்டுமில்லாமல் பழங்குடியினர் உண்டு உறைவிட அரசு பள்ளிகளுக்கும் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் அய்யப்பன் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை