தெரு நாய்கள் பெருக காரணமென்ன?
கடந்த, 10 ஆண்டுகளில் தெருநாய்கள் பெருகிவிட்டன. முன்பெல்லாம் வீடு, ஓட்டல்களில் இருந்து வெளியே வீசியெறியப்படும் உணவு மிச்சங்களை தெரு நாய்கள் உண்டு பசியாறின. தற்போது, உணவு மிச்சங்கள் வெளியே கொட்டப்படுவதில்லை. சாலையோர கடைகளில், சிக்கன் துண்டை சாப்பிட்டு விட்டு, வீசியெறியும் சிறிய எலும்புத் துண்டுக்காக காத்திருக்கும் நிலையில் தான் தெரு நாய்கள் உள்ளன.பசியின் கொடுமை தாளாமல் தான், தெரு நாய்கள், ஆடுகளை கடிக்கின்றன; ஆடு வளர்ப்பை நம்பியுள்ள விவசாயிகளுக்கு, இது பெரும் பொருளாதார பாதிப்பு தான்; இதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவை சிகிச்சையை உள்ளாட்சி நிர்வாகங்கள் வேகப்படுத்தினால், தெரு நாய்கள் வாழ்வதற்கான சூழல் உருவாகும்.- டாக்டர் பரிமளராஜ் குமார், பிரதம மருத்துவர், திருப்பூர் கால்நடை மருத்துவமனை.