இளைஞர்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை?
இளைஞர்கள் மீது
ஏன் இவ்வளவு அக்கறை?விக்னேஷ்வரன், விஜயமங்கலம்:புதிதாக உருவாகியுள்ள கட்சிகள் தங்கள் பக்கம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பதை உடனே அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்; அதனையே முதலீடாக எண்ணுகின்றனர். பொதுவாக, 18 முதல், 25 வயது வரை உள்ளவர்கள் முதல் தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்கிறார்களோ அவர்கள் கட்சியில் இணையவும், அவர்களுக்கே தொடர்ந்து ஓட்டளிக்கவும் விரும்புவர் என்பது அரசியல் கட்சியினர் கணக்கு. ஆகையால், இப்போதே அவர்களை தங்கள் பக்கம் அனைத்து கட்சியினரும் இழுக்க முயற்சிக்கின்றனர்.கவிப்பிரியா, வாவிபாளையம்:துவக்கத்திலேயே இளைஞர்களின் ஓட்டுகளை கவர்ந்து விட்டால், அடுத்தடுத்த தேர்தலில் குறிப்பிட்ட ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள முடியும். தவிர, கொள்கைகளை எடுத்துக்கூறி அவர்களை, கட்சி உறுப்பினராக்கி விடவும் வாய்ப்பு உருவாகும். தவிர, இளம் தலைமுறையினர் தினசரி பல்வேறு சமூக வலைதளங்களில் எழுதுபவராக, தினசரி பார்ப்பவராக, கருத்து தெரிவிப்பவராக உள்ளனர். இவர்கள் கட்சியின் பிரசாரத்துக்கு மிகுந்த பலம் சேர்ப்பார்கள் என்பதால், அவர்களையே தேடிப்பிடிக்கின்றனர்.நித்யா, வஞ்சிபாளையம்:ஒரு கட்சியின் கொள்கை, குறிக்கோள், நோக்கத்தை பொறுத்து, ஆட்சிக்கு வந்த பின் அவர்களது செயல்பாட்டை பொறுத்தே ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கள் கிடைக்கும். புதிய கட்சிகள் என்பதால், இப்போது வேண்டுமானால் புதிய வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். ஆனால், ஆட்சியில் அவர்களது செயல்பாடு எப்படி என்பது பொறுத்து, அடுத்த தேர்தலில் கூட ஓட்டு மாறிவிடும். புதிய கட்சிகளை பொறுத்தவரை இளைஞர்கள் கூட்டத்தை சேர்த்தால், 'மாஸ்' என்று நினைக்கின்றனர். ஆகையால் அதற்கான முயற்சியை தீவிரமாக மேற்கொள்கின்றனர்.