உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி நல வேட்பு விழா; 100 தம்பதியர் பங்கேற்பு

மனைவி நல வேட்பு விழா; 100 தம்பதியர் பங்கேற்பு

அனுப்பர்பாளையம்; திருப்பூர், 15 வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, முல்லை நகர் முருகம்பாளையம் தவ மையங்கள் சார்பில், மனைவி நல வேட்பு விழா வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூ அறிவு திருக்கோவில் மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை கவுரவ ஆலோசகர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார் நிர்வாகி விஸ்வநாதன், வஞ்சிபாளையம் ரோட்டரி சங்க நிர்வாகி சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். துணை தலைவர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். பேச்சாளர் அன்னலட்சுமி, சிறப்புரையாற்றினார். நுாற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ