உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாசன வாய்க்கால்கள் துார்வாரப்படுமா? அமராவதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

பாசன வாய்க்கால்கள் துார்வாரப்படுமா? அமராவதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்:அமராவதி பாசன வாய்க்கால்களை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில், 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால்களுக்கு, அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள, தடுப்பணைகள் வாயிலாக, மண் வாய்க்கால்கள் வழியாக நீர் வழங்கப்படுகிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, காரத்தொழுவு, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால்களும், தாராபுரம், அரவக்குறிச்சி தாலுகாவில், 10 வலது கரை பழைய வாய்க்கால்களும் உள்ளன. ஒவ்வொரு வாய்க்கால்களும், குறைந்தபட்சம், 8 கி.மீ., முதல், 14 கி.மீ., துாரம் வரை மண் வாய்க்கால் அமைந்துள்ளன.ஆண்டு தோறும் ஜூன் மாதம், தண்ணீர் திறப்பதற்கு முன், பழைய வாய்க்கால்கள் துார் வார, அரசு சார்பில், குடிமராமத்து திட்டத்தின் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. பாசன சங்கங்கள் வாயிலாக துார்வாரப்பட்டு வந்தது.இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால்கள் துார்வார நிதி ஒதுக்கவில்லை. முழுவதும் மண் வாய்க்கால்களாக உள்ளதால், கரைகள் சரிந்தும், செடி, கொடிகள், புற்கள் என புதர் மண்டியும் காணப்படுகின்றன. மடைகள் அனைத்தும், பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.இதனால், பாசனத்திற்கு நீர் திறந்தாலும், பயிர் சாகுபடிக்கு பயன்படுத்த முடியாமல், நீர் வழித்தடம் அழிந்துள்ளது. இதனால், கடை மடை பாசன நிலங்களுக்கு நீர் செல்லாமல், சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை