உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?

அமராவதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?

உடுமலை; கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இப்பாலத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. அவற்றில் செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பாலத்தில், சுவர்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் பிரதிபலிப்பான், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என மடத்துக்குளம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை