உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பூச்சித்தாக்குதல் அதிகரிப்பு; முருங்கை விளைச்சல் பாதிக்கும்?

 பூச்சித்தாக்குதல் அதிகரிப்பு; முருங்கை விளைச்சல் பாதிக்கும்?

பொங்கலுார்: முருங்கை ஒரு வெப்பமண்டல பயிர். திருப்பூர் மாவட்டம் பெரும்பகுதி மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் இப்பகுதியில் முருங்கை நன்கு விளைகிறது. விவசாயிகள் இதை தனி பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனர். இது சீசன் முடிவுறும் காலம். இதனால் முருங்கை வரத்து குறைந்துள்ளது. கிலோ, 100 முதல்,160 ரூபாய் வரை விலை போகிறது. தற்பொழுது பருவமழை காலம் முடியும் தருவாயில் உள்ளது. குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது முருங்கை பூக்கும் தருணம் ஆகும். இந்த சமயத்தில் பூச்சி தாக்குதல் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக உயர் விளைச்சல் ரகங்களை இது அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனால் மரங்களில் இலைகள் முற்றிலுமாக உதிர்ந்து வறண்ட மரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. மாசி, பங்குனி மாதங்கள் முருங்கை சீசன் காலம் ஆகும். நோய் பாதித்த மரங்களில் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !