அகலுமா இடையூறு?
ஆக்கிரமிப்பு திருப்பூர், 32வது வார்டு டி.பி.ஏ., காலனியில் சாலை ஆக்கிரமிப்பால், வாகனங்கள் சென்று வர சிரமம் உள்ளது; அப்புறப்படுத்த வேண்டும்.- வெங்கட், திருப்பூர்---நெருக்கடி பெரியார் காலனி, பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக, தள்ளுவண்டிக்கடைகளை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இடையூறில்லாத இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரதாப், பெரியார் காலனி.-- தேக்கம் ஜெய்வாபாய் பள்ளி வீதியில் பல நாட்களாக குப்பை அள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கிறது; மாநகராட்சி உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.- வின்சென்ட், மிலிட்டரி காலனி.--