| ADDED : டிச 03, 2025 07:15 AM
பல்லடம்: பல்லடம் அடுத்த செம்மிபாளையம் ஊராட்சி, கே.என்.புரம் பகுதியில், நால்ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு, ஏராளமான கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இப்பகுதியில், திறந்த வெளியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி, இப்பகுதி பொதுமக்கள், பிளக்ஸ் பேனர்களையும், அருகில் இருந்து பயன்படாத அறிவிப்பு பலகைகளையும் வைத்து மூடி வைத்துள்ளனர். இது, வாகன போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்ட மிகுந்த பகுதி என்பதுடன், வார சந்தை நடைபெறும் நாட்களில், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியை தான் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய், மழை நீரால் மூடப்படும் போது, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இந்த கால்வாய் மூடப்படாமலேயே உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், மக்கள் நடமாட்டம் மிக்க இடத்தில் உள்ள திறந்தவெளி கழிவு நீர் கால்வாயை மூட வேண்டும்.