உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்டாண்டில் நுழையாத பஸ் போலீஸ் அதிரடி தொடருமா?

ஸ்டாண்டில் நுழையாத பஸ் போலீஸ் அதிரடி தொடருமா?

பல்லடம்: கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும், 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றன. பெரும்பாலான அரசு பஸ்கள், பஸ் ஸ்டாண்டை தவிர்த்து, ரோட்டிலேயே பயணிகளை ஏற்றுவதும் இறக்குவதுமாக உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்கள் ரோட்டிலேயே, பஸ்சுக்காக காத்திருப்பது, விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பஸ்கள் பஸ் ஸ்டாண்டை தவிர்ப்பதால், இங்குள்ள கடைகளில் விற்பனை ஆகாமல் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தீபாவளியின்போது, பொதுமக்கள் பஸ்சுக்காக ரோட்டில் காத்திருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்களை உள்ளே அனுப்பியதுடன், அடம் பிடித்த அரசு பஸ்களையும், பஸ் ஸ்டாண்டுக்குள் அனுப்பினர். போலீசாரின் இந்த நடவடிக்கை வரவேற்கும்படியாக அமைந்தது. தினசரி இத்தகைய நடவடிக்கை தொடர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை