உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சியின் எல்லை விரிவாக்க திட்டத்தை இனியாவது அறிவிப்பாங்களா? ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியும் இழுபறி

நகராட்சியின் எல்லை விரிவாக்க திட்டத்தை இனியாவது அறிவிப்பாங்களா? ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியும் இழுபறி

உடுமலை : உடுமலை நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நடப்பாண்டாவது இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. 33 வார்டுகளில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 61,113 பேர் வசித்து வருகின்றனர்.நுாற்றாண்டு கண்ட நகராட்சி விரிவாக்கம் செய்யப்படாமலும், வளர்ச்சியடையாமலும், ஆண்டுக்கு, ரூ.32.11 கோடி வருவாயுடன், தேர்வு நிலை நகராட்சியாக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.நகரை ஒட்டிய ஊராட்சிகள் வளர்ச்சியடைந்தாலும், குடிநீர், ரோடு, பாதாளச்சாக்கடை என அடிப்படை வசதிகளுடன் வளர்ச்சியடையாமலும், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெரு நகரிலுள்ள நிறுவனங்கள் என வளர்ச்சியடையாமலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, அரசு அலுவலகங்கள் புற நகர பகுதிகளுக்கு மாற்ற முடியாத நிலையில், நகரம் குறுகிய பரப்பளவில் உள்ளது.நகரை ஒட்டியுள்ள பெரியகோட்டை ஊராட்சி, போடிபட்டி, சின்னவீரம்பட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணர், குறிஞ்சேரி ஆகிய, 10 ஊராட்சிகளை இணைத்து, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த, 10 ஆண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஊராட்சிகளை இணைக்கும் போது, நகரப்பகுதி, 91.17 சதுர கி.மீ., பரப்பளவு விரிவடையும். மக்கள் தொகை, ஏறத்தாழ, 3 லட்சத்திற்கும் மேல் அதிகரிக்கும்.இந்நிலையில், கடந்தாண்டு, அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து, தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியது.இதன் அடிப்படையில், கடந்த, ஜன., 12ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில், நகரம் வரை வளர்ச்சியடைந்துள்ளதும், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மேலும், குரல்குட்டை, புக்குளம், கோட்டமங்கலம், பொன்னேரி, தொட்டம்பட்டி, தாந்தோணி, வடபூதிநத்தம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்கலாம், என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்கும் போது, வருவாய் அதிகரிப்பதோடு, குடிநீர், பாதாளச்சாக்கடை, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, கூடுதல் துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள் என மக்களுக்கான வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.மத்திய, மாநில அரசுகளிடமிருந்து, கூடுதல் நிதி பெற முடியும் என்ற சூழலில், நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் இழுபறியாகி வருகிறது. நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கும் திட்டத்திற்கு, பெரும்பாலான ஊராட்சிகள் தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பியுள்ளன.

மக்கள் எதிர்பார்ப்பு

எனவே, நகர வளர்ச்சி, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சிகளுடன், ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.வரும், டிச., மாதத்துடன் ஊராட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பு வெளியாகுமா, என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.முன்னாள் நகராட்சித்தலைவர் வேலுசாமி, தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:உடுமலை நகராட்சி வார்டு வரையறை, கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு சில வார்டுகளில், 600 வாக்காளர்கள், ஒரு சில வார்டுகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என குழப்பம் உள்ளது.நகராட்சியுடன், அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கும் போது, பூகோள ரீதியாகவும், நிர்வாக வசதிக்கு ஏற்றதாகவும், மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படும். எனவே, ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ