மேலும் செய்திகள்
பிளஸ் 2 விடைத்தாள்திருத்தும் பணி நிறைவு
19-Apr-2025
திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்தாண்டு முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டம், 2025 லும் முதலிடம் பெற்று, அடுத்தடுத்த ஆண்டுகளில் முதலிடம் என்ற முந்தைய சாதனையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், 2023ம் ஆண்டு, மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற திருப்பூர், கடந்த, 2024 ல், 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று அசத்தியது. கடந்த, 2019, 2020 தொடர்ந்து இரு ஆண்டுகள் முதலிடத்தை பெற்று அசத்திய திருப்பூர் மாவட்டத்தின் ஹாட்ரிக் வெற்றி பயணம், 2021 கொரோனா காரணமாக நிறைவேறாமல் போனது.கடந்த, 2022ல் முதலிடத்தில் இருந்த திருப்பூர், ஆறு இடங்கள் பின்தங்கி, ஏழாவது இடத்துக்கு சென்றது. மாவட்ட கல்வித்துறை, ஆசிரியர்களின் சீரிய முயற்சியால், அடுத்த ஆண்டே (2023) ஐந்து இடங்கள் முன்னேறி, இரண்டாமிடத்தை எட்டி பிடித்தது.கடந்தாண்டு (2024), சிவகங்கை (97.42) மாவட்டத்தை, 0.03 சதவீத வித்தியாசத்தில் பின்னுக்கு தங்கி, 97.45 சதவீதத்துடன் முதலிடத்தை மீண்டும் எட்டிபிடித்தது.காங்கயத்தில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் களுக்கு பள்ளிகல்வித்துறை பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.பிளஸ் 2 தேர்வில் மூன்று முறை முதலிடத்தை பிடித்துள்ள திருப்பூர், இன்று காலை வெளியாகும் தேர்வு முடிவுகளில் மீண்டும் முதலிடம் பிடித்தால், நான்கு முறை முதலிடம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் இணைய முடியும்.தவிர, 2019 க்கு பின் (ஆறு ஆண்டுகளுக்கு பின்) தொடர்ந்து இரு ஆண்டுகள் முதலிடத்தை தக்க வைத்த தனது முந்தைய சாதனையையும் தொட்டு பார்க்கலாம்.இன்று காலை, 9:00 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிடுகிறார்.திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை, 25 ஆயிரத்து, 863 மாணவர்கள், 379 தனித்தேர்வர்கள் என, 26 ஆயிரத்து, 241 பேர் எழுதியுள்ளனர். 2024ம் கல்வியாண்டு, 23 ஆயிரத்து, 849 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், நடப்பாண்டு கூடுதலாக, 2,014 பேர் சேர்த்து, 25 ஆயிரத்து, 863 பேர் தேர்வெழுதி உள்ளனர்.மாவட்டத்தில் தேர்வெழுதியவர் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் என்பதால் தேர்ச்சி சதவீதம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
19-Apr-2025