யானைகள் இல்லையேல் மனிதர்கள் இல்லை
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு -- 2 சார்பில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில், ''யானைகள் இல்லையேல் காடுகள் இல்லை. காடுகள் இல்லையேல் நீர்நிலைகள் இல்லை. நீர்நிலைகள் இல்லையேல், மனிதர்கள் இல்லை. யானைகள் காடுகளில் உள்ள பழங்களை உண்டு விதைபரவுதலுக்கு உதவுகின்றன. யானைகள் அதிக நினைவுத்திறன் கொண்ட விலங்கு. சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்க யானைகள் இன்றியமையாதது. நம் நாட்டில் யானைகளை பாதுகாக்க, 33 காப்பகங்கள் உள்ளன,'' என்றார். அலகு -- 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் 'யானைகளை பாதுகாப்போம்' என உறுதிமொழி மேற்கொண்டனர்.