உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; விசாரணை நடத்த உறவினர்கள் வலியுறுத்தல்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; விசாரணை நடத்த உறவினர்கள் வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை அருகேயுள்ள, சோமவாரப்பட்டியை சேர்ந்த கட்டட மேஸ்திரி ரமேஷ் என்பவருக்கும், கிணத்துக்கடவை சேர்ந்த குப்புசாமி - மனோன்மணி தம்பதியரின் மகள் சங்கீதாவிற்கும், கடந்த, 2018ம் ஆண்டு, சீர்வரிசைகளுடன் திருமணம் நடந்தது. சங்கீதா - ரமேஷ் தம்பதியினருக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ரமேஷ் அடிக்கடி, சங்கீதாவுடன் சண்டையிட்டு வந்ததால், கடந்த ஜூலை, 14ம் தேதி, விஷமருந்திய நிலையில், தனியார் மருத்துவமனையில், நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், சங்கீதாவின் பெற்றோர், குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், கணவர் ரமேஷ் மற்றும் அவரின் உறவினர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கடந்த வாரம், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் உரிய நடவடிக்கை எடுக்காததோடு, போலீஸ் ஸ்டேஷன் சென்ற சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், நேற்று உடுமலை டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியதோடு, டி.எஸ்.பி., நமச்சிவாயத்திடம் புகார் மனு அளித்தனர். உறவினர்கள், 'வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட சண்டை காரணமாகவே சங்கீதா உயிரிழந்துள்ளார்; உயிரிழப்புக்கு முன், கணவர்- மனைவி இருவரும் மொபைல் போனில் பேசியுள்ளனர். எனவே, கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்', என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை