உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மகளிர் பண்பு பயிற்சி முகாம்

 மகளிர் பண்பு பயிற்சி முகாம்

தென் தமிழ்நாடு, சேவா பாரதி சார்பில், மகளிர் சேவை பண்பு பயிற்சி முகாம், திருமுருகன்பூண்டியிலுள்ள சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை வளாகத்தில், நாளை (27ம் தேதி) துவங்குகிறது; வரும் 29ம் தேதி வரை நடைபெறும். உடல், மனம், புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், யோகா, தியானம், தேச பக்தி, பண்பு கதைகள், தேச பக்தி பாடல்கள், சேவை பணி, தொழில் பயிற்சி, விளையாட்டு, மன வலிமை சார்ந்த பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பயிற்சியில் சேரலாம். மூன்று நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், யோகாசனம் செய்வதற்கு பிரத்யேக ஆடை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 98942 11005, 90805 33698 என்கிற எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை