உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மகளிரணி மாநாடு தி.மு.க. தீர்மானம்

 மகளிரணி மாநாடு தி.மு.க. தீர்மானம்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. அவை தலைவர் நடராஜன், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ், மாநில மகளிரணி பிரசார குழு நிர்வாகி உமா மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேசிய ஊரக திட்டத்தில் காந்தி பெயர் மற்றும் திட்டத்தை மாற்றும் மத்திய அரசை கண்டிப்பது, வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சிறப்பாக மேற்கொண்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, தி.மு.க. இளைஞர் அணியின் வடக்கு மண்டல மாநாட்டை திருவண்ணாமலையில் சிறப்பாக நடத்திய துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, 'வெல்லும் தமிழ் பெண்கள்' தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டை திருப்பூர் மாவட்டத்தில் நடத்த அனுமதியளித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. வரும், 29 ம் தேதி பல்லடம், காரணம்பேட்டையில் நடக்கும் மகளிர் அணி மாநாட்டில், நிர்வாகிகளை அதிகளவு பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ