உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்கள் பாதுகாப்பு மனித சங்கிலி ஊர்வலம்

பெண்கள் பாதுகாப்பு மனித சங்கிலி ஊர்வலம்

திருப்பூர்,; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மாணவ செயலர் மதுகார்த்திக் முன்னிலை வகித்தார். மாணவ பிரதிநிதி நவீன் குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். 'பெண்கள் நம் நாட்டின் கண்கள், பெண்களை பாதுகாப்பது நமது கடமையாகும். பெண்கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.ஒரு பெண் கல்வி கற்றால் அவள் தலைமுறையே கல்வி கற்பதற்கு சமம்,' என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மாணவ செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

விழிப்புணர்வு

உலக புலம்பெயர் பறவைகள் தினத்தை முன்னிட்டு, எஸ்.பெரியபாளையம், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் வழிகாட்டி மணிகண்டன் பங்கேற்று, 'பறவைகளை பாதுகாப்பது நமது கடமை' எனும் தலைப்பில் பேசினார். மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி ஆகியோர் தலைமையில், மாணவர்கள் பறவைகளை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை