உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வொண்டர் டைமண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு

வொண்டர் டைமண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோட்டில் 'வொண்டர் டைமண்ட்ஸ்' வைர நகைக்கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது, 23வது கிளையை திருப்பூரில் அமைத்துள்ளது.திருப்பூர், காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவன கிளையை நேற்று மேயர் தினேஷ்குமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.திறப்பு விழாவுக்கு நிறுவன தலைவர் விஸ்வநாதன், இயக்குநர் மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். நிறுவனர்கள் அனிருதன் கிராந்தி, ஐஸ்வர்யா குப்தா மற்றும் சவுந்தர்யா குப்தா ஆகியோர் வரவேற்றனர். திருப்பூர் கிளை பங்குதாரர் சிவகுமார் நன்றி கூறினார்.நிர்வாகிகள் கூறுகையில், 'தொழில் நகரான திருப்பூர் வைரங்களின் பிரகாசத்தை அறியும் வகையில் இந்த கிளை துவங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, அழகுக்கு அழகு சேர்க்கும் வைர நகைகள்,நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.நுாறு சதவீதம் நிலையான, தரம் மற்றும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் எண்ணங்களை கவரும் வகையிலான வைர நகைகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு 89258 50093 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி