உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக., இறுதிக்குள் சீருடைகள் வினியோகிக்க பணிகள் தீவிரம்

ஆக., இறுதிக்குள் சீருடைகள் வினியோகிக்க பணிகள் தீவிரம்

உடுமலை; அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான சீருடை நான்கு 'செட்'கள் வழங்கப்படுகின்றன. முதல் பருவத்தில் இரண்டு, அடுத்தடுத்த பருவங்களில் தலா ஒன்று வீதம் வழங்கப்படுகிறது.கடந்தாண்டில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கல்வியாண்டின் இறுதியில் மட்டுமே நான்கு 'செட்' சீருடைகளும் வழங்கப்பட்டன. இதனால், பெற்றோர் மிகவும் அதிருப்தியடைந்தனர்.நடப்பாண்டில் இப்பிரச்னையை தவிர்க்க, முதல் பருவம் நிறைவு பெறுவதற்குள் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் 'செட்' சீருடையை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இருப்பினும், அவ்வப்போது எண்ணிக்கைக்கு ஏற்ப சீருடைகள் வடிவமைக்கப்பட உள்ளது. சீருடை வடிவமைப்பதற்கான துணிகள் வழங்கப்பட்டுள்ளன.மகளிர் குழுவினர் சார்பில், பள்ளிகளில் அளவுகளும் எடுக்கப்படுகிறது. ஆக., இறுதிக்குள் சீருடைகளை முழுமையாக வடிவமைத்து மாணவர்களுக்கு வினியோகிக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை