பேரூராட்சி ஆபீஸ் கட்டடம் ஆமை வேகத்தில் பணி
குன்னத்தூர் : குன்னத்துார் பேரூராட்சி அலுவலகம் குறுகிய கட்டடத்தில் இயங்கி வந்தது. போதுமான இடவசதியின்றி அலுவலர்கள் சிரமப்பட்டு வந்தனர். புதிய அலுவலகம் கட்ட மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் அரசு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.கட்டட பணி கடந்த ஜன., மாதம் முதல் தொடங்கியது. ஒரு வருடத்தில் கட்டி முடிக்க அரசு உத்தரவு வழங்கி உள்ளது. ஒரு ஆண்டில் அலுவலகம் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கட்டுமான துவங்கி ஆறு மாதமாகியும், இன்னும் கீழ் தளம் கூட நிறைவு பெறாமல் உள்ளது. அதிகாரிகள் கண்டு கொள்ளா போக்கால் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது பேரூராட்சி அலுவலகம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், பலரும், வீட்டு விஷேசங்களை நடத்த முடியாமல் உள்ளனர். எனவே, பேரூராட்சி அலுவலக கட்டடத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி சமுதாய கூடத்தை விடுவிக்க வேண்டும்.