மெஷினில் சிக்கிய தொழிலாளி பலி
திருப்பூர்; பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரத்தன்ஜெய்குமார், 18. கடந்த சில நாட்களாக, குண்டடம், மரு துார் பகுதியில் உள்ள தனியார் தீவன உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். நேற்று காலை எதிர்பாராத விதமாக மெஷினுக்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர். அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.