உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சம்பளம் இழுத்தடிப்பு; தொழிலாளர்கள் கவலை

சம்பளம் இழுத்தடிப்பு; தொழிலாளர்கள் கவலை

திருப்பூர்; மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக, வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் பகுதியை சேர்ந்த இத்திட்ட தொழிலாளர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த பின், கூறியதாவது: கரைப்புதுார் கிராமம், பொன்நகர் பகுதியில், 40க்கும் மேற்பட்டோர், வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். எங்களில், ஐந்து பேர் மாற்றுத்திறனாளிகள். கடந்த ஆண்டு, தினமும், 260 ரூபாய் வரை வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு, 80 முதல் 90 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். அதிலும், கடந்த மூன்று மாதங்களாக சம்பள தொகை வழங்காமல், இழுத்தடிக்கின்றனர். இந்த சம்பள தொகையை நம்பியே எங்கள் குடும்பம் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள சம்பள தொகையை பெற்றுத்தரவேண்டும். தினக்கூலியை உயர்த்தி, நியாயமான கூலி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை