மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
01-Jan-2025
50 யூனிட் ரத்தம் தானம்
23-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர், டாக்டர். முருகநாதன் கூறியதாவது:எதிர்மறை பண்புகளை விட்டு, நேர்மறை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பம் மற்றும் சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மூழ்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்; தினசரி உடற்பயிற்சி செய்தால், நல்ல விஷயம். புகை பிடிக்கும், மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதனை கைவிட வேண்டும்.ஒரு செடி, மரம், தன் இலைகளை உதிர்த்து, புதிய இலைகளை தோற்றுவிப்பது போன்று, ஒவ்வொருவரும் புதிதாய் மாற வேண்டும். திருப்பூரில் உருவாகும் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமானப் பணிக்கு, இயன்ற பங்களிப்பு வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
01-Jan-2025
23-Dec-2024