ஏ.டி.எம்., மெஷினில் கொள்ளை முயற்சி; வாலிபர் கைது
திருப்பூர்; திருப்பூரில் ஏ.டி.எம்., மெஷினில் கொள்ளைய டிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் - காங்கயம் ரோடு, விஜயாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம்., மெஷின் உள்ளது. நேற்று அதிகாலை மையத்துக்கு சென்ற ஒருவர், கூர்மையான ஆயுதத்தால், ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார்.உடைக்கும் சத்தத்தை கேட்டு, அப்பகுதியை சேர்ந்த சிலர், நல்லுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார், ஏ.டி.எம்., மெஷினை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்தனர். விசாரணையில், திருப்பூரை சேர்ந்த கண்ணன், 36 என்பது தெரிந்தது. அவரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.