செயின் பறித்த வாலிபர் கைது
திருப்பூர்; பெருமாநல்லுார், கருக்கன்காட்டு புதுாரை சேர்ந்த, 72 வயது மூதாட்டி தேவி. கடந்த 4ம் தேதி திருமலை நகர், நீலண்டி அம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த மர்மநபர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் செயினை பறித்துக்கொண்டு, மாயமானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜீவா, 32 என்பவரை கைதுசெய்து, அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.