மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
19-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் ஜம்மனை பள்ளத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 41; சுமைபணியாளர். கணவர் இறந்து, இரு குழந்தைகளுடன் இருந்த, 31 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.செல்வராஜின் நண்பரான சமையல் தொழிலாளி சுதாகர், 30 என்பவருடன், அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, செல்வராஜை பிரிந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், அப்பெண்ணிடம், மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தினார். அவர் மறுக்கவே, இரும்பு கம்பியால் தாக்கினார். தடுக்க வந்த சுதாகரை குத்தினார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுதொடர்பாக, சென்ட்ரல் போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.
19-Dec-2024